சிவகாசி பத்திரிகையாளர் தாக்குதல் வழக்கில் 2 அதிமுக பிரமுகர்கள் கைது!
சிவகாசி பத்திரிகையாளர் தாக்குதல் வழக்கில் 2 அதிமுக பிரமுகர்கள் கைது!
தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்
பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடைபெற கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று முன்தினம் இரவு குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் பத்திரிகையாளர் கார்த்திக் மீது மர்ம நபர்கள் சிலர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த பத்திரிகையாளர் கார்த்திக்கை பொதுமக்கள் சிலர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
செய்தியாளர்கள் போராட்டம்
இந்நிலையில், பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, விருதுநகர் மற்றும் சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அதிமுகவை சேர்ந்த கு.முருகன் மற்றும் செல்லபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also see...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.