ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கரூரில் தம்பிதுரையை தோற்கடித்த ஜோதிமணி!

கரூரில் தம்பிதுரையை தோற்கடித்த ஜோதிமணி!

ஜோதிமணி MP

ஜோதிமணி MP

எளிய தோற்றம், படித்தவர், நீண்ட கால காங்கிரஸ் தொண்டர், மேலிட ஒத்துழைப்பு, திமுக ஆதரவு என அனைத்தும் ஜோதிமணிக்குக் கூடுதல் பலம் சேர்த்தன.

 • 1 minute read
 • Last Updated :

  அதிமுக-வின் கோட்டையாகவே இருந்துவந்த கரூர் தொகுதியை இம்முறை திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வென்றுள்ளார்.

  கரூர் தொகுதி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக-வின் கோட்டையாகவே இருந்துள்ளது. அதிமுக எம்.பி-யான தம்பிதுரை இருமுறை கரூர் தொகுதியில் வென்றுள்ள போதும் மக்கள் மத்தியில் அவருக்குப் பெரிய ஆதரவு இல்லை என்றே கூறப்பட்டது.

  மற்ற எந்த தொகுதியிலும் இல்லாத அளவுக்கு திமுக-வின் ஒத்துழைப்பு கரூர் தொகுதியில் அதிகமாகவே இருந்ததாகக் கூறப்பட்டது.

  இதே தொகுதியில் 4 முறை வென்றுள்ள தம்பிதுரைக்கு பிரசாரத்தின் போதே பல இடங்களில் எதிர்ப்பு காணப்பட்டது.

  எளிய தோற்றம், படித்தவர், நீண்ட கால காங்கிரஸ் தொண்டர், மேலிட ஒத்துழைப்பு, திமுக ஆதரவு என அனைத்தும் ஜோதிமணிக்குக் கூடுதல் பலம் சேர்த்தன. பாஜக ஆதரவு உடனான அதிமுக என்பதாலே இத்தொகுதியிலும் அதிமுக கூட்டணி தோற்றதாகவே கூறப்படுகிறது.

  சுமார் 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வென்றுள்ளார்.

  Published by:Rahini M
  First published:

  Tags: Jothimani, Karur S22p23