இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் வேலையின்மை அளவு அதிகம் - ரவிக்குமார் எம்.பி

ரவிக்குமார், பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

வேலை வேண்டிப் பதிவு செய்து காத்திருக்கும் லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு இந்த அரசு என்ன வழி சொல்லப்போகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Share this:
  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் வேலையின்மை அளவு அதிகம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

  இதுபற்றி கூறிய அவர், “அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 59ஆக உயர்த்தியிருப்பது வேலையின்மை அதிகரித்துவரும் இந்த நேரத்தில் தேவையானதுதானா? இதனால் பலனடைபவர்கள் சில ஆயிரம் பேர் மட்டும்தான்.

  ஆனால் வேலை வேண்டிப் பதிவுசெய்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த அரசு என்ன வழி சொல்லப்போகிறது? இந்தியாவிலேயே வேலையின்மை சதவீதம் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.” என்றார்.

  மேலும், ஓய்வுபெறும் வயதை உயர்த்தியிருப்பது, “வேலையின்மையை அதிகரிக்கும் வேலை” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Also see:
  Published by:Rizwan
  First published: