“அரசியலமைப்பையும், கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு“ ரஜினிக்கு ஆய்ஷி கோஷ் விளக்கம்

“அரசியலமைப்பையும், கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு“ ரஜினிக்கு ஆய்ஷி கோஷ் விளக்கம்
ஆய்ஷி கோஷ்
  • Share this:
அரசியலமைப்பையும், கல்வியையும் பகத்சிங், அம்பேத்கர் அவர்கள் வழி நின்று பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்களாகிய தங்களுக்கு உண்டு என்று ஆய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அனைவருக்குமான கல்வியை உறுதிப்படுத்த வேண்டும், கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்கக்கூடாது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.என்.யூ, பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் ஆய்ஷி கோஷ் கலந்து கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கல்வி உரிமைகளை நசுக்கும் எந்த முயற்சியையும் எதிர்த்து போராட எல்லா உரிமையும் எங்களுக்கு உண்டு. கல்வி என்பது விற்கப்படும் வியாபார பண்டம் அல்ல, அது ஒவ்வொருடைய உரிமை .


Also Read : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினிகாந்த் கடிதம்
 மாணவர்களாகிய நாங்கள் இந்த சமூகத்தில் வளர்ந்து வரும் நிலையில் ஆங்கிலேயே காலணி ஆதிக்கத்தில் இந்திய அடிமை பெற்று இருந்ததை போல நாங்கள் அடிமையாக இருக்க விரும்பவில்லை. சாவக்கர், கோல்வாக்கர் அவர்களுடைய வழித்தோன்றல்கள் கூடிய தேசியத்தை நாங்கள் ஏற்க விரும்பவில்லை“ என்றும் கூறினார்.

அப்போது மாணவர்கள் தேவையற்ற போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அரசியலமைப்பையும் கல்வியையும் பகத்சிங், அம்பேத்கர் அவர்கள் வழி நின்று பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்களாகிய தங்களுக்கு உண்டு என்பதை நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும்“ என்றார்.
First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்