ஜே.என்.யூவின் டி.என்.ஏ நாட்டுக்கு எதிரானது: மூடப்பட வேண்டிய ஒன்று! குருமூர்த்தி

ஜே.என்.யூவின் டி.என்.ஏ நாட்டுக்கு எதிரானது: மூடப்பட வேண்டிய ஒன்று! குருமூர்த்தி
குருமூர்த்தி (கோப்பு படம்)
  • Share this:
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மூடப்பட வேண்டிய ஒன்று என்று துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குரூமூர்த்தி தெரிவித்துள்ளார்.

துக்ளக் பத்திரிக்கையின் 50-வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயூடு கலந்துகொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுகொண்டார்.

அந்த விழாவில் பேசிய குரூமூர்த்தி, ‘குடியுரிமை சட்ட விவகாரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நிலையை எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ளனர். இது ஆபத்தானது. நாத்திக அரசியலுக்கு எதிரான இந்து அரசியலை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர் தான். ஜே.என்.யுவின் டி.என்.ஏ நாட்டிற்கு எதிரானது. அது திருத்தப்பட வேண்டிய ஒன்று. இல்லையென்றால் மூடப்பட வேண்டிய ஒன்று. சோ எதையும் வெளிப்படையாக செய்வார்.


நான் எதையும் வெளிப்படையாக செய்ய மாட்டேன். அதனால் அது பற்றி இங்கு சொல்ல மாட்டேன்.
தமிழ்நாட்டில் இந்து எதிர்ப்பு அரசியல் இருக்குறது என்பதை நான் ஏற்றுகொள்ளமாட்டேன்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்