தமிழகத்தில் சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஒசூர், வேலூர் உள்ளிட்ட 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை தொழில்நுட்ப துறை மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் நீரஜ் மிட்டல் கலந்து கொண்டனர்.
இந்த அறிமுக நிகழ்வின்போது தகவல் தொழில்நுட்பத் துறையின் மனோ தங்கராஜ் கூறியதாவது: “தமிழ்நாட்டில் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகளை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீண்டகால அடிப்படையில் 5ஜி சேவைகள் தமிழ்நாடு மாநில மக்களுக்கு நேர்மறையான மாற்றங்களின் மூலம் பெரும் ஆதாயங்களை வழங்கும்.
ஸ்டார்ட் அப் சூழலமைப்பு மீது தமிழ்நாடு அரசு சிறப்பு கூர்நோக்கத்துடன் செயலாற்றி வருகிறது. இம்மாநிலத்தில் 5ஜி சேவைகள் தொடங்கப்படுவது, பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தரவுப் பகுப்பாய்வு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மீது பணியாற்றி வருகின்ற இம்மாநிலத்தின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது பெரிய உத்வேகத்தையும், உந்துதலையும் நிச்சயம் தரும் என்றார்.
இந்நிகழ்ச்சியின்போது பேசிய ஜியோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “தமிழ்நாட்டில் இன்னும் 6 நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை விரிவாக்கம் செய்வதில் நாங்கள் அளவற்ற உற்சாகம் கொண்டிருக்கிறோம். மிக விரைவிலேயே ஜியோ ட்ரூ 5ஜி – ன் வலையமைப்பு தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செயல்படும். 2023 டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமமும், நகரமும் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளைப் பெற்று பயன்படுத்துகின்ற நிலையில் இருக்கும்.
ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் தொடங்கப்படுவதன் மூலம் மிகச்சிறந்த தொலைத்தொடர்பு வலையமைப்பை மட்டும் தமிழ்நாடு பெறுவதில்லை. மின் – ஆளுகை, கல்வி, சுகாதார பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பம், சிறு நடுத்தர நிறுவனங்களது பிசினஸ் ஆகிய பிரிவுகளிலும், புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இது திறந்துவிடும். நிகழ்நேர அடிப்படையில் அரசும், அதன் குடிமக்களும் தொடர்ந்து இணைப்பில் இருப்பதை ஜியோ ட்ரூ 5ஜி ஏதுவாக்கும்; அரசின் சிறப்பான திட்டங்கள் அனைத்தும் இறுதியில் அத்திட்டத்தின் பலனைப் பெறும் பயனாளிகளை விரைவாக சென்றடைவதற்கு பெரிதும் உதவும்.
தமிழ்நாட்டில் 5ஜி வலையமைப்பை நிறுவுவதற்காக ரூ.40,000 கோடிக்கும் அதிகமான தொகையை ஜியோ முதலீடு செய்திருக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1 லட்சம் நபர்களுக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறது. இம்மாநிலத்தின் மீது ரிலையன்ஸ் ஜியோ கொண்டிருக்கும் பொறுப்புறுதியையும், பிணைப்பையும் இது நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் அற்புதமான ஆற்றலும் மற்றும் அதன் மிகப்பிரமாதமான ஆதாயப் பலன்களும் ஒவ்வொரு நபருக்கும் இதனால் கிடைக்கும் என்பதால், தமிழ்நாட்டில் அனைத்து நபர்களுக்கும் ட்ரூ 5ஜி சேவை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய ஜியோ பொறியியலாளர்கள் ஓய்வின்றி, தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டை டிஜிட்டல்மய பொருளாதாரமாக ஆக்குவதற்கும் மற்றும் இம்மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் இன்னும் வேகமாக எடுத்துச் செல்வதற்கும் தங்களது மேலான ஆதரவை வழங்கி வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கும் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று கூறினார்.
இன்றுமுதல் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் ஜியோ பயனாளிகள் கூடுதல் கட்டணமின்றி 1 Gbps+ வேகம் வரை வரம்பற்ற தரவினை அனுபவிப்பதற்கு ஜியோ வெல்கம் ஆஃபரை பயன்படுத்த அழைக்கப்படுவார்கள்.
மூன்று மடங்கு ஆதாயதை ஜியோ ட்ரூ 5ஜி கொண்டிருப்பதால், இந்தியாவில் ஒரே ட்ரூ 5 ஜி வலையமைப்பாக இதனை ஆக்கியிருக்கிறது:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.