ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில இருக்கிறவங்கதான் விலையுயர்ந்த போன் யூஸ் பண்றாங்க - ஜார்க்கண்ட் திருடனின் பகீர் வாக்குமூலம்

சென்னையில இருக்கிறவங்கதான் விலையுயர்ந்த போன் யூஸ் பண்றாங்க - ஜார்க்கண்ட் திருடனின் பகீர் வாக்குமூலம்

செல்போன் திருட்டு

செல்போன் திருட்டு

தாம்பரத்தில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜார்க்கண்டை சேர்ந்த இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விலை உயர்ந்த செல்போன்களை தனி ஒருவனாக திருடிய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நபர் சிசிடிவி காட்சிகள் மூலம் தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் சிக்கினார்.

  சென்னை தாம்பரம் அடுத்த கிண்டியை சேர்ந்த லோகேஷ்வரன் (வயது 35) இவர் ஜூலை 27-ம் தேதி கிண்டியில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கி செல்லும் போது தன்னுடைய விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே இதுகுறித்து தாம்பரம் இரும்புப் பாதை காவல் நிலையத்தில் செல்போனை காணவில்லை என்று புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  அதே நாளில் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் செய்வதற்காக டிக்கெட் வாங்கிக் கொண்ட பிறகு சில நிமிடத்தில் விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதை கண்டதும் உடனே இது குறித்து ரயில்வே இரும்புப் பாதை போலீசாரிடம் புகார் அளித்தார்.

  அதன்பிறகு ரயில்வே போலீசார் தாம்பரம் ரயில்நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வந்தபோது ஒரு நபர் குப்புசாமியிடம் இருந்து செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடி சென்றது தெரியவந்தது, இது குறித்து தீவிர விசாரணை இறங்கினர்.

  Also Read: நிர்வாண கோலத்தில் தகராறு செய்த டிராபிக் போலீஸ்.. அலறியடித்து ஓடிய பெண்கள் - சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளான குடியிருப்புவாசிகள்

  இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்காக தாம்பரத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்த மற்றொரு பயனிடமிருந்து செல்போன் திருடிச் சென்றதாக புகார் வந்துள்ளது. தொடர்ந்து செல்போன் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் குற்றவாளியை விரைவில் கைது செய்ய வேண்டுமென்று ரயில்வே, டி.எஸ்.பி ஸ்ரீகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ரயில் நிலையங்களில் உள்ள  சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது ஒரே நபர் தான் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

  சிசிடிவியில் பதிவான காட்சிகளை தொடர்ச்சியாக பார்த்த போது வால்டாக்ஸ் ரோடு பகுதியில் குற்றவாளி தங்கியிருப்பது தெரிய வந்தது.அங்கு  குற்றவாளியை பிடிக்க சென்ற போது அவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள இராம்புரா கிராமத்திற்கு சென்று விட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே ரயில்வே தனிப்படை போலீசார் ஜார்கண்டுக்கு விரைந்தனர். அங்கு இரண்டு நாட்களாக தங்கியிருந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட கமந்தோ குமாரை (வயது 21) கைது செய்தனர்.

  Also Read: உள்ளாட்சித் தேர்தலில் நிர்வாகிகளை களமிறக்க நடிகர் விஜய் முடிவு?

  அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 40 நாட்களில்  26 விலை உயர்ந்த செல்போன்களை கொள்ளை அடுத்ததாக வாக்குமூலம் அளித்தார், அதன்பிறகு கொள்ளையடித்த 26 செல்போன்களையும் பறிமுதல் செய்து அவரை தாம்பரம் இரும்புப்பாதை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீசார் தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  சென்னையில் உள்ளவர்கள் விலை உயர்ந்த செல்போன்களை தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் ஒவ்வொருவரும் இரண்டு செல்போன்களை வைத்திருப்பதால்அவர்களிடமிருந்து  செல்போன்களை திருடி விற்றால் அதிக அளவு பணம் கிடைக்கும் என்று அவனது நண்பன் ஆசை வார்த்தை கூறியதால் தனி ஒருவனாக செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக குற்றவாளி  வாக்குமூலம் அளித்தார். அதன் பிறகு கமந்தோ குமார் மீது ரயில்வே  போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் செல்போனை பறிகொடுத்த 26 நபர்களுக்கு பத்திரமாக செல்போனை கொடுத்தனர்.

  செய்தியாளர்: சுரேஷ்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Arrest, Crime News, Mobile phone, Railway police, Theft