ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நகைக்கடன் தவனை முடிவதற்கு முன்பே, நகைகளை ஏலம் விட்டு மோசடி: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு

நகைக்கடன் தவனை முடிவதற்கு முன்பே, நகைகளை ஏலம் விட்டு மோசடி: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு

நகைக்கடன் தவனை முடிவதற்கு முன்னே, நகைகளை ஏலம் விட்டு மோசடி: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் மீது வழக்குபதிவு

நகைக்கடன் தவனை முடிவதற்கு முன்னே, நகைகளை ஏலம் விட்டு மோசடி: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் மீது வழக்குபதிவு

நகை கடன் தவனை முடிவதற்கு முன்னே, நகைகளை ஏலம் விட்டதாக கூறி, மோசடி செய்த பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவர் கடந்த 14.09.2020 அன்று தனது தந்தையின் மருத்துவ செலவிற்காக, 40.08 கிராம் எடையுள்ள  நகைகளை, தஞ்சாவூர் மேலவீதியில் செயல்பட்டு வரும் பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் 1,38,440 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார்.

மேலும் ஓராண்டு திட்டத்தில் 13% வட்டி விகிதத்தில் நகைகளை வைத்துள்ளார். இந்நிலையில் 16.04.2021 அன்று வட்டியுடன் அசலை செலுத்தி நகைகளை மீட்க நிதி நிறுவனத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நகைகளை ஏலம் விட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Also read: கள்ளக்காதல் விவகாரத்தில் பழிக்குப்பழி சம்பவம் - கோஷ்டி மோதலில் ரவுடி கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த அமர்நாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர் மேற்கு காவல்நிலைய காவல்துறையினர் பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி வரை தவணை உள்ளது. ஆனால் நகைகளை அடகு வைத்து ஆறு மாதத்திற்குள் நகைகளை ஏலம் விட்டதாக கூறுகின்றனர். எனவே அங்கு பணிபுரியும் ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டார்களா இல்லை நிதி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதா என விசாரணை செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது போன்று ஏழை எளிய மக்களின் நகைகளை மோசடி செய்வதாகவும், எனவே உரிய விசாரணை நடத்தி என்னுடைய நகைகளை மீட்டுத்தர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து நிதி நிறுவனத்தில் சென்று கேட்டபோது, அவர் வட்டி கட்டவில்லை, உரிய விளக்கம் அளிக்க வில்லை அதனால் தான் அவரின் நகைகள் ஏலம் விட்டதாக சேல்ஸ் மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

Published by:Esakki Raja
First published:

Tags: Gold loan, Jewels