Home /News /tamil-nadu /

இப்படியும் ஒரு நகை கொள்ளை.. காவல் உதவி மையம் அருகே துணிகரம்.. சென்னையில் பரபரப்பு

இப்படியும் ஒரு நகை கொள்ளை.. காவல் உதவி மையம் அருகே துணிகரம்.. சென்னையில் பரபரப்பு

Pallavaram

Pallavaram

உதவி காவல் மையம் இருக்கக்கூடிய இடத்திலேயே நகை வாங்குவது போல் நடித்து கொள்ளையர்கள் நகைகளை திருடிச் சென்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பல்லாவரம் அருகே புதிய நகை வாங்குவது போல் வந்து 30, சவரன் நகையை திருடி சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் கடந்த 20வது வருடங்களாக அடகுக் கடையுடன் சேர்த்து நகைக்கடை நடத்தி வருபவர் கமலேஷ் ஜெயின் (வயது-37) ஆவர்.

    இந்த நிலையில்,நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவன், தன்னிடம் நிறைய பணம் உள்ளது என்றும்,தான் இன்று அவசரமாக வெளியூர் செல்ல இருப்பதால், தனக்கு கழுத்தில் அணிந்து கொள்ள பெரிய தங்க செயின் ஒன்று வேண்டும் என்று கூறியுள்ளார்.

    கமலேஷ் ஜெயின் தன்னிடம் இருந்த வெவ்வேறு மாடல் தங்கச் செயின்களை அவனிடம் காட்டியுள்ளார். அதனை வாங்குவது போல், பரிசோதித்த மர்ம நபர்,  நகைக் கடையின் உரிமையாளரை திசைதிருப்பி கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென நகையுடன் சாலையை நோக்கி மர்மநபர் ஓடியுள்ளார். மேலும் அங்கு ஏற்கனவே தயாராக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மற்றொரு நபருடன் சேர்ந்து தப்பிச் சென்றுள்ளார்.

    Also read: பொதுஇடத்தில் சண்டை போட்டுக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள்.. தர்மசங்கடத்தில் கட்சித் தலைமை

    இது குறித்து சங்கர் நகர் காவல்நிலையத்தில்  கமலேஷ் ஜெயின் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பம்மல் உதவி காவல் மையம் இருக்கக்கூடிய இடத்திலேயே நகை வாங்குவது போல் நடித்து கொள்ளையர்கள் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பம்மல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பம்மல் பகுதியில் தொடர்ந்து இது போன்ற குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக போலீசார் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Gold Theft, Pallavaram

    அடுத்த செய்தி