முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசியலில் இருந்து விலகுகிறேன் - ஜெ.தீபா அதிரடி

அரசியலில் இருந்து விலகுகிறேன் - ஜெ.தீபா அதிரடி

ஜெ.தீபா

ஜெ.தீபா

  • Last Updated :

அரசியலில் இருந்து விலகுவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது ஃபேஸ்புக் பதிவில், பேரவையை அதிமுகவுடன் இணைத்துவிட்டதாகவும், யாரும் தம்மை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் ஜெ.தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், எனக்கென்று குடும்பம் உள்ளது. அதுதான் எனக்கு முக்கியம் குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை.

பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் ஜெ.தீபா பின்னர் அதை நீக்கியுள்ளார். விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

top videos
    First published:

    Tags: J Deepa