• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு பெருகும் ஆதரவு!

சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு பெருகும் ஆதரவு!

சசிகலா - பன்னீர்செல்வம்

சசிகலா - பன்னீர்செல்வம்

சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு  அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜே. சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார். கே.பி.முனுசாமி அளித்த பேட்டி ஒரு தரப்பினரை வேதனைக்கு உள்ளாகி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு  அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜே. சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைக்கு கட்டுப்படுவதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு  நிகராக யாரும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சசிகலா விவகாரம் தொடர்பாக அதிமுகவின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜே. சி.டி பிரபாகர் சேத்துபட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
    அப்போது அவர் கூறியதாவது,  சசிகலாவை இணைப்பது குறித்து தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசனை செய்யப்படும் என ஓ. பி.எஸ் கூறிய கருத்துகள் சரியே. ஒ.பி.எஸ் கூறிய கருத்துகள் ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என கூறுவது தவறு.

    ஒ.பி.எஸ் மற்றும் ஈ. பி.எஸ் இடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என நம்புகிறேன். அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள், எதிர்கால நலன்களை நினைத்து முடிவுகள் எடுக்க வேண்டும்.
    இப்போதைக்கு கட்சியில் சேர்த்து கொள்வது குறித்து எந்த கோரிக்கையும் யாரும் வைக்க வில்லை

    தலைவர்கள் தடுமாறலாம் : ஆனால் அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர் மீது கொண்டுள்ள அன்பை குறைக்கவில்லை. வழிகாட்டுதல் குழு உறுப்பினருக்கு எந்த அதிகாரம் உள்ளது என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. தர்மயுத்தம் மூலம் மீண்டும் இணையும் போது யாரையும் சேர்த்து கொள்ள கூடாது என ஓ.பன்னீர்செல்வம்  அப்போது சொன்னதை இப்போது ஒப்புமை படுத்த முடியாது. கலைஞர் முதல்வராக இருந்த போது, எம்.ஜி.ஆர் கட்சி நீக்கத்துக்கு கலைஞர் மட்டும் காரணம் இல்லை உடன் இருந்தவர்கள் தான் காரணம்.

    ஜே.சி.டி. பிரபாகர்


    ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தலைவர்கள் அதிமுகவில் தற்போது ஒதுங்கி இருக்கிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் விரைவில் அதிமுக கலந்து கொள்வது தான் கட்சிக்கு நல்லது. அதிமுக தொண்டர்கள் யாரும் சசிக்கலாவை சுற்றுபயணத்தில் சந்திக்க மாட்டார்கள். கட்சியின் தலைமைக்கு கட்டுப்படுவதில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நிகராக யாரும் கிடையாது.

    இதையும் படிங்க: சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் சரியாக பேசியுள்ளார்: டிடிவி தினகரன்!


    சசிகலா தினகரன் ஆகியோரை சேர்ப்பதா,இல்லையா என்பதில் ஓ.பன்னீர்செல்வம் குறித்த கருத்து தான் என்னுடைய கருத்தும்.தமிழ்நாடு அரசியலில் அதிமுக அசைக்க முடியாத மாபெரும் இயக்கமாக வளர்ந்து உள்ளது இதற்கு காரணம் தொண்டர்கள்தான். ஆனால் சமீப காலமாக பெரிய சோர்வை தொண்டர்களுக்கு அளித்து வருகிறது

    அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் அளித்த பேட்டிக்கு பின்பு ஒருங்கிணைப்பாளர் அளித்த பேட்டி அதன் பின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி.முனுசாமி அளித்த பேட்டிகள் கட்சியில் உள்ள தொண்டர்களின் பல்வேறு கோணங்களை காட்டியுள்ளது

    மேலும் படிக்க: தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ ஆர்.எஸ்.எஸின் கல்விக் கொள்கையை திணிக்கும்.. கி.வீரமணி


    கே.பி.முனுசாமி அளித்த பேட்டி ஒரு தரப்பினரை வேதனைக்கு உள்ளாகி உள்ளது, இந்த கட்சி  காப்பாற்றப்பட வேண்டும் என்றால் தலைவர்கள் மறைமுகமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவதை ஏற்றுகொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: