ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக அலுவலகத்தில் விரைவில் ஜெயலலிதாவின் புதிய சிலை!

அதிமுக அலுவலகத்தில் விரைவில் ஜெயலலிதாவின் புதிய சிலை!

ஜெயலலிதாவின் புதிய சிலை

ஜெயலலிதாவின் புதிய சிலை

ஆந்திராவில் சிற்பி ராஜ்குமாரின் கைவண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் புதிய சிலை சென்னை வந்தடைந்தது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை, ஓரிரு நாட்களில் நிறுவப்பட உள்ளது. மறைந்த ஜெயலலிதாவின் உருவச் சிலை கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டது.

  ஜெயலலிதாவின் சாயலில் சிலை இல்லை என கூறி பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, புதிய சிலை நிறுவப்படும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில், 800 கிலோ எடையுடன் 8 அடி உயரத்தில் ஜெயலலிதாவின் புதிய வெண்கலச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

  ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி எனும் இடத்தில் சிற்பி ராஜ்குமாரின் கைவண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் புதிய சிலை சென்னை வந்தடைந்தது. இந்தச் சிலை ஓரிரு நாட்களில் அதிமுக அலுவலகத்தில் நிறுவப்பட உள்ளது.

  Published by:DS Gopinath
  First published:

  Tags: ADMK, Jayalalithaa, Statue