அதிக நேரம் பிரசாரம் செய்ததாக திருமாவளவன் மீது வழக்குப் பதிவு!

நேற்று ஜெயங்கொண்டத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திருமாவளவன், அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் பிரசாரம் செய்யாமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ததாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறி அவர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.

அதிக நேரம் பிரசாரம் செய்ததாக திருமாவளவன் மீது வழக்குப் பதிவு!
திருமாவளவன், எம்பி.
  • News18
  • Last Updated: April 17, 2019, 3:11 PM IST
  • Share this:
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக நேரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது ஜெயங்கொண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் போட்டியிடுகிறார்.

நேற்று ஜெயங்கொண்டத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திருமாவளவன், அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் பிரசாரம் செய்யாமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ததாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறி அவர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.

மேலும், அவருடன் சேர்த்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also see...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading