• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாகர்கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை அகற்றம்!

நாகர்கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை அகற்றம்!

ஜெயலலிதாவின் சிலை அகற்றம்

ஜெயலலிதாவின் சிலை அகற்றம்

”சிலையை அகற்ற முடியாது. என்னைக் கொன்று விட்டு சிலையை அகற்றுங்கள் என்று சிலர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது”

  • Share this:
    நாகர்கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலையை அதிகாரிகள் அகற்ற கூற, அதிமுகவினர் அகற்ற மறுத்துள்ளனர். உரிய அனுமதி பெற்று சிலையை வைப்பதாக கூறி ஜெயலலிதாவின் சிலையை மாவட்ட அதிமுக செயலாளர் அகற்றினர்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பரதர் தெருவில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலை அருகே அதிமுகவினர் புதிதாக ஜெயலலிதா சிலை ஒன்றை அமைத்தனர். சிலை வைப்பதற்கு முறையான அனுமதி இல்லை என்று கூறி மாநகராட்சி அதிகாரிகளும் வட்டாட்சியரும் சம்பவ இடத்திற்கு வந்து சிலையை அகற்றும்படி கூறினார்கள்.

    ஆனால், அதிமுகவினர் சிலையை அகற்றவில்லை. ”சிலையை அகற்ற முடியாது. என்னைக் கொன்று விட்டு சிலையை அகற்றுங்கள்” என்று சிலர் கூறியுள்ளனர். இதனால், அதிகாரிகளுக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சிலையை அகற்ற பலமுறை அதிகாரிகள் கூறியும் அதிமுகவினர் கேட்கவில்லை. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளர் அசோகன் அங்கு வந்தார். அவர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து முறைப்படி சிலையை திறந்து வைத்தார். இதனால் அங்கு கூடி இருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    அதன் பின்னர், அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதிமுகவினர் முறையாக அனுமதி பெற்று மீண்டும் சிலையை வைக்க சம்மதித்தனர். இதனால் அதிமுகவினரே ஜெயலலிதாவின் சிலையை அகற்றினர்.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: