ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் ஜனவரி 28-ம் தேதி திறப்பு... பொதுமக்கள் பார்வையிட அனுமதி

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் ஜனவரி 28-ம் தேதி திறப்பு... பொதுமக்கள் பார்வையிட அனுமதி

வேதா இல்லம் (கோப்பு படம்)

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

 • Last Updated :
 • Share this:
  சென்னை போயஸ் கார்டனில் நினைவு இல்லமாக மாற்றப்பட்ட முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

  வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அதனை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

  சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கு மறு நாளே வேதா நிலையமும் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது. வேதா நிலையத்தை மக்கள் பார்வையிட, விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Vijay R
  First published: