முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவடத்தில் பல்வேறு தரப்பினரும் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரோடு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தொடங்கி பட்டிக்காட்டு பொன்னையா வரை 28 திரைப்படங்களில் ஜோடியாக நடத்தவர் ஜெயலலிதா. அந்த நட்பு தான் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது. எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு கிட்டத்தட்ட அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது என அனைவரும் நினைத்தார்கள். ஆனால் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்தார். தமிழகத்தின் பெண் சாணக்கியர் எனலாம் ஜெயலலிதாவை.
“ஜெ. ஜெயலலிதா எனும் நான்”.. சினிமா.. அரசியல்.. தடம் பதித்த தங்கத்தாரகை!
ஆம் எந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் தான் அவமானப்பட்டோமோ, அந்த சட்டமன்றத்திற்குள் முதலமைச்சராகத் தான் நுழைவேன் என வைராக்கியத்தோடு சாதித்துக் காட்டியவர் ஜெயலலிதா. சினிமா, அரசியல் என சாதித்துக்காட்டிய ஜெயலலிதா உடல்நிலை பிரச்னைகாரணமாக முடங்கினார்.
தீவிர சிகிச்சையும் செயல்படாமல் போனதால் 2016ம் ஆண்டு இதேநாளில் காலமானார் ஜெயலலிதா. அதன்படி ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காலை 9.30 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார். அதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காலை 10.30 மணிக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து அஞ்சலி செலுத்துகிறார். வி.கே. சசிகலா காலை 11 மணிக்கும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 11.30 மணிக்கும் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jayalalitha, Jayalalithaa