மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்பமனு அளிக்கலாம் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா, தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இதற்கான விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். அதிமுகவில் தனது அணியை இணைக்க அவர் முயற்சி செய்து வருவதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியான நிலையில், அவர் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுடன் உடன்பாடு எட்டப்படவில்லை அப்படி எட்டியிருந்தால் இன்று மெகா கூட்டணியில் இடம் பெற்றிருப்போம் என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.
“தற்போது வரை அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்த காரணத்தினால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக எந்த அறிக்கையும் நாங்கள் வெளியிடவில்லை.
தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இப்போது இது அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் அதிமுகவுடனான விருப்பத்தை தெரிவித்தார்கள்.
என்றுமே அதிமுகவை எதிர்த்து நாங்கள் பேசியது இல்லை அதிமுக பாஜவை கட்டுபடுத்தியது போன்றவற்றால் கருத்து தெரிவித்தேன்.
எல்லா தொகுதியிலும் வேட்பாளர் தேர்வு நடத்தப்படும் எந்த தொகுதியில் சிறப்பாக செயல்படமுடியுமோ அங்கு போட்டியிடுவோம். இரண்டு மூன்று காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
அதிமுகவும் டிடிவியும் ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்கள் பின்னால் உள்ளார்கள் என்று கூறுகிறார்கள். அதிமுக டி.டி.வி எங்கள் பேரவை என அனைத்திலும் சேர்த்து ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர்.
See Also... ₹20 நாணயம் வெளியீடு... டிடிவி உற்சாகம்.. - வைரலாகும் நெட்டிசன் மீம்ஸ்
விருப்பமனு பெற்ற பின்னர் தமிழக அளவில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும். கூட்டணி கதவுகள் பெரும்மையாக மூடபட்டுவிட்டன இருப்பினும் எங்களை யாரேனும் அழைத்தால் அது குறித்து ஆலோசிப்போம்.
இன்று வரை பல்வேறு அழுத்தத்திற்கு பின்னும் நான் தொண்டர்களின் ஆதரவோடு இருக்கிறேன். அதிமுக மட்டுமல்ல பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் தரப்பட்டது.
அன்று நிறைய கூட்டம் என்னை பேர் பார்க்க வந்தனர் அது எங்கள் அத்தை திடீரென மறைந்து விட்டார் அதனால் அனுதாபத்தினாலும் பலர் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் வந்தனர்.
பாமக என்ற ஒரு கட்சி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்கள். ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள்.
எந்த காலத்திலும் சசிகலா குடும்பத்துடன் அதாவது டிடிவி உள்ளிடோருடன் கூட்டணி இல்லை. வேட்பாளர்களை யாரும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இருப்பதில்லை. விருப்பமனு பெறப்பட்டு முடிவு செய்யப்படுவர்” என்றார்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் உங்கள் அணி உள்ளதே என்ற கேள்விக்கு, “அப்படியெல்லாம் இல்லை நிறைய விஷசக்திகள் இருந்தனர். அவர்களை வெளியேற்றி விட்டு தற்போது முறையாக செயல்பட்டு வருகிறது.
நகரங்களில் இருந்து பார்க்கிறீர்கள் , கிராமபுறங்களிலிருந்து நிறைய பேர் கேட்கிறார்கள் எங்களுக்கு நல்லது செய்யுங்கள் என்று.
அதிமுகவுடன் உடன்பாடு எட்டப்படவில்லை அப்படி எட்டியிருந்தால் இன்று மெகா கூட்டணியில் இடம் பெற்றிருப்போம்.
பத்திரிக்கையாளர்கள் நான் இன்று அழைக்கவில்லை, உங்களிடம் நான் கொடுத்த அழைப்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பி தீபா எப்போது வேண்டுமானாலும் பத்திரிக்கையாளர்கள் எங்களை எளிதில் அணுகலாம்
இடைத்தேர்தலில் அல்லது நாடாளுமன்ற தேர்தலிலும் நான் போட்டியிடுவதாக இருந்தால் உரிய கள ஆய்வு மேற்கொள்ளப்படும் இதுவரை நான் போட்டியிடுவது முடிவெடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “3 மாதங்களுக்கு முன்பு அதிமுகவுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்திருந்தோம். ஆனால் அதில் சரியான முடிவுகள் எட்டப்படாததால் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக” ஜெ.தீபா விளக்கம் அளித்துள்ளார்.
தீபாவின் கணவர் மாதவன் வரும் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also See....
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.