ஜெயலலிதா நினைவிட பணிகள் நிறைவு: ஜனவரி மாதம் அரசிடம் ஒப்படைக்க திட்டம்

ஜெயலலிதா நினைவிட பணிகள் நிறைவு: ஜனவரி மாதம் அரசிடம் ஒப்படைக்க திட்டம்

ஜெயலலிதா நினைவிடம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை முறைகள், அவர் செய்த சாதனைகள், மக்களுக்கு செய்த சேவைகள், வீடியோ, ஆடியோ, படங்கள், அடங்கிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

    2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தனர். இந்நிலையில் நினைவிடம் பணிகள் நிறைவடைந்து அரசிடம் ஒப்படைக்கப்பட தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இருப்பதாகவும், பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம், அறிவுத்திறன் பூங்கா, நடைபாதை, புல்வெளி உள்ளிட்டவை 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

    அங்கே 12 கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் கட்டும் பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்றும், இன்னும் ஒரு வாரத்தில் இந்தப்பணிகள் நிறைவடையும் எனவும், ஜனவரி முதல் வாரத்தில் நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அங்கே, டிஜிட்டல் முறையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை முறைகள், அவர் செய்த சாதனைகள், மக்களுக்கு செய்த சேவைகள், வீடியோ, ஆடியோ, படங்கள், அடங்கிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவின் நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு, விரையில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
    Published by:Suresh V
    First published: