• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் - 27-ம் தேதி முதல்வர் திறந்துவைப்பு

மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் - 27-ம் தேதி முதல்வர் திறந்துவைப்பு

ஜெயலலிதா நினைவிடம்

ஜெயலலிதா நினைவிடம்

பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம், அறிவுத்திறன் பூங்கா, நடைபாதை, புல்வெளி உள்ளிட்டவை 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 27-ம் தேதி திறந்துவைக்க உள்ளார்.

    2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.

    2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

    50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இருப்பதாகவும், பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம், அறிவுத்திறன் பூங்கா, நடைபாதை, புல்வெளி உள்ளிட்டவை 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

    எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை வரும் 27-ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விழாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும், சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: