ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

ஜெயலலிதா நினைவிடம்

பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து, பராமரிப்பு பணிக்காக நீண்ட நாட்களாக அந்த நினைவிடம் மூடப்பட்டு இருந்தது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார்பூங்கா இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

  Must Read : நாளை முதல் நின்றுகொண்டு பயணிக்க தடை - சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு

   

  அதில் ஜெயலலிதா புகைப்படங்கள், மற்றும் சிலை உள்ளிட்டவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: