ஜெயலலிதா நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ள நிலைமையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் வாகனங்களில் சென்னையை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தை இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் திறந்து வைக்க இருப்பதால், வாலாஜா சலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த சாலை வழியாகச் செல்லும் வானங்கள் கலைவானர் அரங்கம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது. மேலும், காமராஜர் சாலையில், போர் நினைவிடத்தில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அதிக அளவில் கலந்துகொள்ள இருப்பதால், 6 ஆயிரம் காவலர்களுடன் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடம் கண்கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க... ஜெயலலிதா நினைவிடத்தை இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், 57.8 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ளன. நினைவிடத்தில் 15 மீட்டர் உயரமும், 30.5 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும் கொண்ட மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பு வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK members, Edappadi Palanisami, Jayalalithaa memorial, Marina Beach