• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மூடி மறைக்கப்பட்ட உண்மை - கோடநாடு வழக்கில் வெளியான புதிய ஆதாரம்

மூடி மறைக்கப்பட்ட உண்மை - கோடநாடு வழக்கில் வெளியான புதிய ஆதாரம்

மூடி மறைக்கப்பட்ட உண்மை

மூடி மறைக்கப்பட்ட உண்மை

கோடநாடு கொலை, கொள்ளையின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடர்பாக, தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

  • Share this:
    மறைந்த, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு, முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இரவுக் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

    இவ்வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கியிருக்கும் நிலையில், சம்பவம் நடந்த நள்ளிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது எப்படி? சிசிடிவி செயல்படாமல் போனது எப்படி என்பது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படவில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வந்தது. கள ஆய்வு செய்த நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி, பங்களாவின் உள்ளே இருந்துதான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.

    இந்நிலையில் மின்துண்டிப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ள தனிப்படை போலீசார், பங்களாவிற்கு என தனியாக செயல்படும் துணை மின்நிலையத்தில் விசாரணையை முடித்துள்ளனர். சம்பவத்தன்று, மின்சார வாரியத்தில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என, மின்வாரியம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

     



    தொடர்ந்து, கோடநாடு பங்களா மின்சார பொறுப்பு நிர்வாகிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கோடநாடு பங்களாவில், மின்சாரம் தடைபட்டால், இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெனரேட்டர்களின் செயல்பாட்டை சம்பவத்தின்போது நிறுத்தியது யார் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: