முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஜெயலலிதா விரும்பவில்லை: சுகாதார செயலாளர்

சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஜெயலலிதா விரும்பவில்லை: சுகாதார செயலாளர்

வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

அனைத்து மருத்துவ வசதிகளும் இங்கேயே இருப்பதால் வெளிநாடு செல்ல வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்த வரையில், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்றும் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்த வரையில், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பவில்லை என்றார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அவரை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வது குறித்து பேசப்பட்டதாகவும், ஆனால், அனைத்து மருத்துவ வசதிகளும் இங்கேயே இருப்பதால் அது வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆறுமுகசாமி ஆணையம் முன் மீண்டும் விசாரணைக்கு வரும் 3ம் தேதி ஆஜராக உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Also Watch:

First published:

Tags: Jayalalithaa