சிகிச்சையின் போது ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்க்கவில்லை - முதல்வர்

news18
Updated: April 16, 2018, 7:41 AM IST
சிகிச்சையின் போது ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்க்கவில்லை - முதல்வர்
முதல்வர் பழனிசாமி
news18
Updated: April 16, 2018, 7:41 AM IST
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை அமைச்சர்களை பார்த்ததாக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கூறியது  பொய் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2011ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை மூட நடவடிக்கை மேற்கொண்டதே அதிமுக அரசுதான் என்றும் ஆலை நிர்வாகத்திடம் பணம் வாங்கியிருந்தால் எப்படி மூடியிருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும்,காவிரி விவகாரத்தை சட்டரீதியாகதான் அணுக வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் நீதிபதி ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை அமைச்சர்களை பார்த்ததாக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கூறியது  பொய் எனவும் முதல்வர் தெரிவித்துல்ளார்.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்