ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையமானது பல தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்தது. ஜெயலலிதா சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

நீதிபதி ஆறுமுகசாமி
ஆனால், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்றது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், 21 மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்த பின்னர்தான், ஆறுமுக சாமி ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று அப்போலோ தரப்பு வாதிட்டது.
இறுதியில், ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.
மேலும், அப்போலோவின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜெயலலிதாவின் அப்போலோ நாட்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.