ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

யானையையும் நரிகள் கொன்றுவிடும்... ஜெயலலிதா இறப்பு தொடர்பான அறிக்கையில் இடம்பெற்றிருந்த திருக்குறள் வரிகள்

யானையையும் நரிகள் கொன்றுவிடும்... ஜெயலலிதா இறப்பு தொடர்பான அறிக்கையில் இடம்பெற்றிருந்த திருக்குறள் வரிகள்

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம்

வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும்  கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும் என்ற திருக்குறள் ஆறுமுகசாமி ஆணையத்தி அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவில் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில்,  திருக்குறளில் 2 குறட்பாக்களும்  கருணாநிதி உரை மற்றும் மு.வரதராசன் உரையும் இடம்பெற்றுள்ளது.

  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுசசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் இன்று சமர்ப்பிக்க பட்டது. அறிக்கையில், ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேத் இறக்கவில்லை என்றும் டிசம்பர் 4ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கே அவர் இறந்துவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

  இதேபோல்,  ‘சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் ஆணையம் வர இயலாது. ஆணைய விசாரணையின் அடிப்படையில் சகிகலா , டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்கள்’ என ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.

  முழு அறிக்கை,

  இந்த அறிக்கையில் இறுதியில் இரண்டு திருக்குறள்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவதாக,

  நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

  வாய் நாடி வாய்ப்பச் செயல்

  இதையும் படிங்க: டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்- தீபக் திதி கொடுத்த தேதியை மேற்கோள் காட்டிய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை

  என்ற குறளும் அதற்கு கருணாநிதி எழுதியிருந்த, ‘ நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் என்ற உரை இடம்பெற்றுள்ளது. இரண்டாவதாக,

  காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

  வேலாள் முகத்த களிறு

  என்ற குறளும் அதற்கு டாக்டர் மு.வரதராசன் எழுதிய, “ வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும்  கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும் என்ற உரையும் இடம்பெற்றுள்ளன.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Arumugasamy commission, Jayalalithaa, Thirukkural