முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெ. மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முழு அறிக்கை தமிழக அரசிடம் நாளை தாக்கல்

ஜெ. மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முழு அறிக்கை தமிழக அரசிடம் நாளை தாக்கல்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்

Jayalalitha Death | ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட  ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நாளை முழு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யவுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில்  2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட நிலையில், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது. ஆணையம் சார்பாக 151 பேரிடமும், தங்களை விசாரிக்க வேண்டும் என்று மனு செய்த 7 பேரிடம் ஆணையம் விசாரணையை நடத்தியது.

இதில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தி  வாக்குமூலத்தை பெற்றது.

இந்த சூழலில் தான் 90 சதவீத பணிகள் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்  ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவர்களின் வாக்குமூலத்தை தவறாக மொழியாக்கம் செய்து பதிவு செய்வதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இதையும் வாசிக்க: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் கொடூரமானது... 18 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை - அருணா ஜெகதீசன் ஆணையம்

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு சென்ற அப்பல்லோ மருத்துவமனை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கியது. இதன் காரணமாக சுமார் 2 வருடங்கள்எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமல் ஆணையம் முடங்கியது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு அமைத்து ஆணையம் தனது விசாரணை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான  7 பேர் உள்ளடக்கிய எயம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. பின்னர் இறுதியாக ஆணையம் அமைக்க காரணமான ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில்  தனது வாக்கு மூலங்களை கொடுத்தார். பல மருத்துவர்களிடமும் குறுக்கு விசாரணையும் செய்யப்பட்டது.

இதன் பின்பு நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் பணிகளை தீவிரப்படுத்தினார். ஆனால் எயம்ஸ் மருத்துவ அறிக்கை கிடைப்பெறவில்லை. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 4  ஆம் தேதி 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு தனது 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுத்துள்ளது.

அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது. இந்த நிலையில், திங்கட் கிழமை காலை முதலமைச்சர் அலுவலகத்தில் ஆணையம் சார்பாக அறிக்கை சமர்ப்பிக்க நேரம் கேட்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து   அரசு கொடுக்கும் நேரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ள சுமார் 500 பக்கங்கள் கொண்ட  இறுதி அறிக்கையை  முதலமைச்சரிடம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு மருத்துவ சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை என்று அறிக்கை அளித்திருப்பதால், ஆறுமுகசாமி எவ்வாறான அறிக்கையை அரசுக்கு கொடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Arumugasamy commission, Jayalalitha