ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டிசம்பர் 4-ம் தேதியே ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் வெளியான புதிய தகவல்

டிசம்பர் 4-ம் தேதியே ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் வெளியான புதிய தகவல்

டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதா மரணம்

டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதா மரணம்

Jayalaithaa | ஜெயலலிதா மரணம் தொடர்பான 608 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேதியே மரணமடைந்தார் என்றும் அதற்கு 2 பேர் சாட்சி என்று ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தங்களது விரிவான விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பான 608 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கான சிகிச்சை பற்றி உண்மை நிலை அறிய விசாரணை தேவை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

  ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின் நடந்த நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 3 நாட்களுக்கு முன்பே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தராதது ஏன்? என்ற கேள்வியும் விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

  மேலும் டிசம்பர் 4 -ம் தேதி மதியம் 3.30 -3.50 மணிக்குள் ஜெயலலிதா மரணம் என 2 பேர் சாட்சியம் அளித்துள்ளதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிக்கையில் உள்ளது. ஆனால் டிசம்பர் 5-ம் இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதான இறந்ததாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெயிட்டு இருந்தது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Arumugasamy commission, Jayalalitha