முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெயலலிதா இறப்புக்கு காரணம் என்ன: எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கையில் முக்கிய தகவல்கள்

ஜெயலலிதா இறப்புக்கு காரணம் என்ன: எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கையில் முக்கிய தகவல்கள்

ஜெயலலிதா

ஜெயலலிதா

Jayalalithaa: டிசம்பர் 4 ம் தேதி ஜெயலலிதா மூச்சுவிடுவதற்கு பெரும் சிரமபட்டுள்ளார்.  இதை தொடர்ந்து இதயம் செயலிழந்தால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமாக தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. முறையான சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மூளை மற்றும் இதயம் செயலிழந்து ஜெயலலிதா உயிரிழ்ந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பல்வேறு தரப்பினர் இடையே விசாரணை நடத்தியதியது. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவக் குழு  3 பக்க அறிக்கையை அளித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான  7 பேர் உள்ளடக்கிய எயம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆணையத்தில் அளிக்கப்பட வாக்குமூலங்களில் ஆவணங்களையும், அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கைகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர். இதன் மூலமாக ஆணையத்தில் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ள இறுதி முடிவுகள்:

திராட்சை, கேக் சாப்பிட்டுள்ளார்

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளது, அதற்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது திராட்சை, கேக், இனிப்புகளையும் சாப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - விசிக வலியுறுத்தல்

20.09.2016 அன்று இரவு 10 மணிக்கு ஆம்புலன்ஸ் கேட்டு ஜெயலலிதா இல்லத்தில் இருந்து தொடர்பு கொண்டதாகவும், அப்போது இருந்த உடல்நிலை பார்த்து, முதற்கட்ட சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பேஸ்மேக்கர் கருவியும் ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டுள்ளது.

உடல் நிலையில் பின்னடைவு

தொடர்ந்து லண்டன் மருத்துவர் ரிச்சட் பிலே உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவ குழுவும் சிசிக்சை அளித்து வந்தனர். டிசம்பர் 3 ம் தேதி ஜெயலலிதா உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 4 ம் தேதி மூச்சுவிடுவதற்கு பெரும் சிரமபட்டுள்ளார்.  இதை தொடர்ந்து இதயம் செயலிழந்தால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு; கோவையில் சிபிசிஐடி தீவிர விசாரனை

மூளை மற்றும் இதயம் செயலிழந்தது

டிசம்பர்5 ம் தேதி உரிய மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் உடலை பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்தது  என்பதை உறுதி செய்து டிசம்பர்  5 ம் தேதி 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

கட்டுப்படுத்த முடியாத அளவிற்கான நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு தான் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்றும், பாக்டீரியா ரத்தத்தில் பரவி இருக்கிறது. இது போல உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் காரணமாக  இறுதியாகவும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23 ம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி இறுதி அறிக்கையை அரசிடம் சமர்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: AIIMS, Arumugasamy commission, Jayalalithaa, Jayalalithaa Dead