மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் வி.கே.சசிகலா சசிகலா அஞ்சலி செலுத்தவுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.உடல் நலக்குறைவால் 2016 செப்டம்பர் 23-ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74 நாட்கள் தொடர்ந்து உயர் சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5-ம் தேதி தனது 68-வது வயதில் ஜெயலலிதா மரணமடைந்தார்.
அவரது 5ம் ஆண்டு நினைவு நாள் வரும் 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சல் செலுத்தவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜெயலலிதா தமிழக மக்களின் உரிமைக்காகவும் ஏழை எளிய மக்களின் துயரை நீக்கவும் தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர். உயிர் தொண்டர்களின் நலனில் அக்கறைகொண்டு தன்னலமின்றி பொதுநலத்தோடு மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தன் இறுதி மூச்சுவரை வாழ்ந்துக் காட்டிய ஒப்பற்ற மக்கள்தலைவி நம் ஒவ்வொருவரின் இதயங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
ஜெயலலிதா நினைவு நாளான வரும் 5ம் தேதி காலை 11 மணிக்கு சசிகலா தொண்டர்களோடு சேர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருக்கிறார். இந்த நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து அன்வர்ராஜா நீக்கம்: கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் நடவடிக்கை என அறிவிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.