பெங்களூர் சிறையில் சசிகலாவிடம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

சசிகலாவை சிறையில் விசாரிக்க அனுமதி பெற்றுத்தரக்கோரியும், அனுமதி வழங்கக்கோரியும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Web Desk | news18
Updated: December 7, 2018, 1:23 PM IST
பெங்களூர் சிறையில் சசிகலாவிடம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
ஜெயலலிதா- சசிகலா
Web Desk | news18
Updated: December 7, 2018, 1:23 PM IST
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சென்று விசாரிப்பது தொடர்பாக தமிழக உள்துறைக்கும், பெங்களூர் சிறைத்துறை அதிகாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம், இதுவரை 130க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சசி்கலா தரப்பில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரப்பட்டது., அதற்கு 55 பக்க அபிடவிட் சசிகலா தரப்பில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரிடம் நேரில் சென்று பரப்பன அக்ரகார சிறையில் விசாரிக்க திட்டமிட்டுள்ள, ஆறுமுகசாமி ஆணையம் தற்போது தமிழக உள்துறைக்கும், பெங்களூர் சிறைத்துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

சசிகலாவை சிறையில் விசாரிக்க அனுமதி பெற்றுத்தரக்கோரியும், அனுமதி வழங்கக்கோரியும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also See.. பவர் பேங்க் உள்ளே களிமண்

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...