Home /News /tamil-nadu /

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி இன்று ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி இன்று ஆஜர்

புகழேந்தி

புகழேந்தி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என, அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி 200 பக்கங்கள் அடங்கிய மனுவை ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்து இருந்தார். கடந்த 19ம் தேதி ஆணையத்தில் புகழேந்தி ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் இன்று மீண்டும் ஆஜராகவுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
ஜெயலலித மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆஜராகிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை  156 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஆணையம், சசிகலா, அப்பல்லோ வழக்கறிஞர்கள் என மூன்று தரப்பிலும் விசாரணையை முடித்து கொண்டனர்.

இந்த சூழலில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என, அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி 200 பக்கங்கள் அடங்கிய மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்து இருந்தார். குறிப்பாக ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, நடைபெற்ற காவிரி நதிநீர் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றாரா? அப்போது அங்கிருந்த சூழல் குறித்தெல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதையும் படிங்க: விரைவில் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்குவேன் - வி.கே.சசிகலா அதிரடி


மேலும், அரசையும் விசாரணையில் சேர்க்க வேண்டும் எனவும் மனுவில் சொல்லப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 19ம் தேதி அவர் ஆணையத்தில் ஆஜர் ஆகியிருந்தார். மீண்டும் இன்று ஆஜராக ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி புகழேந்தி இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார்.
Published by:Murugesh M
First published:

Tags: Arumugasamy commission, Jayalalitha

அடுத்த செய்தி