ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தீவிரம்

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தீவிரம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணியை விசாரணை ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

  சமீபத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை தொடர்பான முழு ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். அவர் சமர்பித்த ஆவணங்களில் எத்தனை எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தனர், எந்த மாதிரியான சிகிச்சைகளை ஜெயலலிதாவுக்கு அளித்தனர், எந்தெந்த தேதிகளில் வந்தனர் என்ற விபரங்கள் அடங்கியுள்ளன.

  ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவமனையும் தனது தரப்பு ஆவணங்களை 30 தொகுப்புகளாக ஆணையத்தில் சமர்ப்பித்துவிட்ட நிலையில் அந்த ஆவணங்களை சரிபார்த்ததற்கு பின்பாக அப்போலோ நிர்வாகத்தையோ, எய்ம்ஸ் மருத்துவர்களையோ, அரசு மருத்துவர்களையோ விசாரணைக்கு அழைப்பது தொடர்பாக ஆணையம் முடிவெடுக்கும்.

  ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சிகிச்சை தொடர்பாக வழக்கு ஒன்றைத் தொடுத்த வருவாய்த்துறை அதிகாரியை வரும் 22 ஆம் தேதியும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தன்னையும் விசாரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்திற்கு மனு அளித்திருந்த பெங்களூரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரை 24 ஆம் தேதியும், அரசு மருத்துவர் பாலாஜியை 25 ஆம் தேதியும் விசாரணை ஆணையம் நேரில் அழைத்து விசாரிக்கவுள்ளது.

  Published by:Veeramani Panneerselvam
  First published:

  Tags: Arumugasamy commission, Death probe, Health secretary, Jayalalithaa, Radhakrishnan