ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மருத்துவர்கள் பரிந்துரைத்தும் அறுவை சிகிச்சை ஏன் நடக்கவில்லை? ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் கேள்வி

மருத்துவர்கள் பரிந்துரைத்தும் அறுவை சிகிச்சை ஏன் நடக்கவில்லை? ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் கேள்வி

ஜெ. ஜெயலலிதா

ஜெ. ஜெயலலிதா

Jayalalitha Case | மருத்துவர்களின் பரிந்துரையின் படி ஜெயலலிதாவுக்கு 3 நாட்களுக்கு முன்பே பாராசிட்டமல் கொடுக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஏன் ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை நடக்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

  2ஆம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  அதில், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு சிகிச்சை பற்றிய விவரங்கள் தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

  தனது வீட்டின் முதல் மாடியில்இருந்து படுக்கை அறைக்கு வரும்போது ஜெயலலிதா மயங்கி விழுந்தார். அப்போது அவரை சசிகலா தாங்கி பிடித்ததாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

  அதில், ஜெயலலிதாவிற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. இந்த விசாரணையில் சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என தெரிவித்துள்ளனர்.

  இதையும் படிங்க | டிசம்பர் 4-ம் தேதியே ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் வெளியான புதிய தகவல்

  ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிசம்பர் 4ம் தேதியே அவர் இறந்துவிட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த எல்லாமே மர்மமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

  மருத்துவர்களின் பரிந்துரையின் படி ஜெயலலிதாவுக்கு 3 நாட்களுக்கு முன்பே பாராசிட்டமல் கொடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதனால், வி.கே. சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் , முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், மருத்துவர் ஆபிரகாமிடம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Arumugasamy commission, Jayalalitha, Jayalalithaa Dead