Home /News /tamil-nadu /

திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி!

திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி!

ஜெயக்குமார் திருவள்ளூர் தொகுதி

ஜெயக்குமார் திருவள்ளூர் தொகுதி

தனது பிரசாரத்தைத் தெரு முனை பிரசாரம் முதல் வாட்ஸ்அப் பிரசாரம் வரையில் விரிவுபடுத்தி இருந்தார் ஜெயக்குமார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது முதலே உட்கட்சி பூசல்கள் அதிகப்படியாகவே இருந்தன. ஆனாலும், சொந்தத் தொகுதியிலேயே நிற்பதால் டாக்டர் ஜெயக்குமாருக்கு உள்ளூரில் ஆதரவு இருந்தது.

நன்கு படித்தவர், அரசியல் மற்றும் பொது சேவைக்காக திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பவர் என ஜெயக்குமாரின் பெர்சனல் பக்கங்கள் அவருக்கு இத்தேர்தலில் கூடுதல் ப்ளஸ் ஆக அமைந்தது.

விஐபி-க்கள் உடனான சந்திப்பு, கடைக்கோடி வரையிலான பிரசாரம், தொழில்நுட்ப உத்திகள் என தனது பிரசாரத்தைத் தெரு முனை பிரசாரம் முதல் வாட்ஸ்அப் பிரசாரம் வரையில் விரிவுபடுத்தி இருந்தார் ஜெயக்குமார்.

இதுபோன்ற யுத்திகள் அவருக்கான வெற்றி வாய்ப்பை உறுதி செய்தது. அதிமுக-வின் சிட்டிங் எம்.பி ஆன பி.வேணுகோபால் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டது முதலில் ஜெயக்குமாரின் வெற்றிக்குப் பின்னடைவாக இருந்தாலும், பாஜக உடனான கூட்டணிக்கு இருந்த வெறுப்பலையால் ஜெயக்குமாரின் வெற்றி உறுதியானது.
Published by:Rahini M
First published:

Tags: Lok Sabha Election 2019, Thiruvallur-s22p01

அடுத்த செய்தி