சசிகலாவின் அழைப்பு அ.ம.மு.கவுக்குத்தான்: அ.தி.மு.கவுக்குப் பொருந்தாது - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவின் அழைப்பு அ.ம.மு.கவுக்குதான். அ.தி.மு.கவுக்கு பொருந்தாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அதனோடு ஜெயலலிதாவின் வாழ்க்கை காலக்கோட்டை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா ஆகியவற்றையும் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தனர்.

    ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள இருவரின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துப்புரவு பணியாளர்கள், பொது மக்களுக்கு வழங்கினர்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது குறித்து துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். நாங்கள் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. சசிகலாவின் அழைப்பு அ.ம.மு.க தொண்டர்களுக்கு தான். அ.தி.மு.கவிற்கு பொருந்தாது. சரத்குமார் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார். மரியாதை நிமித்தமாக சசிகலாவைச் சந்தித்திருப்பார். சசிகலாவின் நடவடிக்கைகளால் இரட்டை இலைக்கு எந்த சிக்கலும் இல்லை’ என்று தெரிவித்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: