சட்டையைக் கிழித்துக்கொண்டு ஆட்சியைக் கலைக்கச் சொல்லும்போது ஆளுநர் தேவைப்பட்டாரா- மு.க.ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி
சட்டையைக் கிழித்துக்கொண்டு ஆட்சியைக் கலைக்கச் சொல்லும்போது ஆளுநர் தேவைப்பட்டாரா- மு.க.ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி
ஜெயக்குமார்
சட்டையைக் கிழித்துக்கொண்டு ஆட்சியைக் கலைக்க முறையிடுவதற்கு தி.மு.கவிற்கு ஆளுநர் தேவைப்பட்டார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘லதா மங்கேஷ்கர் மறைவு இந்தியாவிற்கு மிகப்பெரும் இழப்பு. இளம் தலைமுறையினர் லதா மங்கேஷ்கர் பாடலை யூ டியூப்பில் கேட்க வேண்டும். அ.தி.மு.க சார்பில் லதாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். நானும் அவரது ரசிகன். தி.மு.கவினர் விஞ்ஞானப்பூர்வ ஊழலில் கெட்டிக்காரர்கள். தேர்தலையும் அதுபோல எதிர் கொள்ள நினைக்கின்றனர்.
நாகையில் அ.தி.மு.க வேட்பாளர் ஒருவர் இறந்துவிட்டதாக பதிவு செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் தமிழகம் முழுவதும் குளறுபடி இருக்கிறது. அ.தி.மு,க வேட்பாளர்கள் தடையில்லா சான்றிதழ் பெறுவது சிரமமாக இருக்கிறது. தி.மு.கவினருக்கு காவல்துறையினர் முன்கூட்டியே சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தேர்தல் அதிகாரிகள் தவறு செய்தால் அவர்கள் மீது வழக்கு தொடர முடியும். சட்டப்படி தேர்தல் நடத்த அவர்கள் உதவ வேண்டும். வரும் காலத்தில் பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்து அ.தி.மு,க தலைமை முடிவு செய்யும்.
நீட் தேர்வுக்கு காரணம் தி.மு.கதான். சட்டமன்றத்திலிருந்து சட்டையை கிழித்துக் கொண்டு வெளியில் வந்து ஆட்சியை கலைக்க முறையிட தி.மு.கவிற்கு ஆளுநர் தேவைப்பட்டார். தற்போது ஆளுநர் தேவையில்லை என்று கூறுகின்றார்கள்’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.