ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’இமயம் முதல் குமரிவரை திமுக பிரச்சாரம் செய்தாலும், அதிமுக கவலைப்படாது’ - அமைச்சர் ஜெயக்குமார்..

’இமயம் முதல் குமரிவரை திமுக பிரச்சாரம் செய்தாலும், அதிமுக கவலைப்படாது’ - அமைச்சர் ஜெயக்குமார்..

 அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா விடுதலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  சசிகலாவின் விடுதலையை அதிமுக பொருட்படுத்தவில்லை என்றார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரை திமுக பிரச்சாரம் செய்தாலும் அதிமுக கவலைப்படாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, தமிழ்நாட்டின் உரிமைகளை ஆட்சியில் இருந்தபோது தாரைவார்த்து விட்டு, தேர்தல் நேரத்தில் திமுகவினர் மக்களை சந்திப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. மக்களோடு மக்களாக இருக்கும் இயக்கமே அதிமுக. தேர்தல் வந்தால் மீண்டும் அதிமுகவை அரியணையில் ஏற்ற மக்கள் தயாராக உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக செய்து வருகிறது. பிரசாந்த் கிஷோர் எழுதித் தரும் புதுப்புது தலைப்புகளில் என்ன செய்தாலும்,  திமுகவால் தேர்தலில் சாதிக்க முடியாது. கனிமொழி உள்ளிட்டோர் இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரை பிரச்சாரம் செய்தாலும் அதிமுக கவலைப்படாது.

Also read... 'மருத்துவக் கல்வியில் அரசு மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும்' - ராமதாஸ் வலியுறுத்தல்..

மு.க.அழகிரியின் அரசியல் பிரவேசம் திமுகவுக்கே கடும் பாதிப்பை ஏற்படுத்தும். திமுகவில் கட்சியினருக்கு எந்த அளவுக்கு மதிப்பு வழங்கப்படுகிறது என்பதற்கு  பூங்கோதை ஆலடி அருணா விவகாரமே உதாரணம்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள், அதிமுகவின் முடிவை ஏற்றுக்கொண்டே தீர வேண்டும்.  பாஜகவுடனான கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. அமித்ஷா வருகைக்கும் அதிமுக கூட்டத்துக்கும் தொடர்பில்லை என்றார். இறுதியாக சசிகலா விடுதலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,  சசிகலாவின் விடுதலையை அதிமுக பொருட்படுத்தவில்லை என்றார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Minister Jayakumar