தேர்தல் முடிவுகள் வந்தவுடன் திமுக தலைவர் பூஜ்ஜியம் ஆகிவிடுவார்: அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

1972-ல் அதிமுக கட்சி துவக்கப்பட்டு இன்று மிகப்பெரிய இமயம் போல் வளர்ந்து இருக்கின்றது. திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் இருக்கும்போதே அதிமுகவை பத்து வருடம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பூஜ்ஜியம் ஆகிவிடுவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், மூன்று தொகுதி எம் எல் ஏக்கள் நீக்கம் செய்வது அதிமுகவுக்கு ஏற்பட்ட நெருக்கடியா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அந்த மாதிரியான நிர்ப்பந்தம் எதுவும் எங்களுக்கு கிடையாது என்று தெரிவித்தார்.

  திமுக ஆட்சி காலத்தில் அவர்கள் எந்த அளவுக்கு எதிர்க்கட்சிகளை பழி வாங்கினார்கள். அதேபோல் எந்த அளவு ஜனநாயகப் படுகொலை செய்தார்கள் என்று வரலாறு மறந்திருக்காது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒன்று மட்டும் புரிகிறது கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி, ஜெயலலிதா அவர்களின் அரசை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும். இந்த கட்சியையும் அழித்துவிட வேண்டும் என்ற திமுகவும் சரி அதனுடைய B டீம்  தினகரனும் சரி இரண்டு பேரும் கை கோர்த்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரங்கேற்றினார்கள்.

  அது அனைத்தும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை எனவே இப்போது A டீம் ஆக இருக்கின்ற திமுக தலைவர் ஸ்டாலின் B டீம் பாதிக்கப்பட்ட உடன் B டீம்க்கு ஆதரவாக குரல் கொடுத்து மீண்டும் வந்து தனது சட்டையையும் பட்டனையும் கிழித்துக் கொண்டு வெளியே வருவதற்கு தயாராகி வருகிறார். அவருடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

  மேலும், அன்பு அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஜூன் 30-ம் தேதி நாங்கள் ஆட்சி அமைத்து விடுவோம் என்று கூறுகிறார். ஐ.பெரியசாமி 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி அமைத்து விடுவோம் என்று கூறி வருகிறார். இரண்டுமே நடக்கப் போவது கிடையாது.

  23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலிலே பூஜ்ஜியம் ஆகிவிடுவார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

  1972-ல் அதிமுக கட்சி துவக்கப்பட்டு இன்று மிகப்பெரிய இமயம் போல் வளர்ந்து இருக்கின்றது. திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் இருக்கும்போதே அதிமுகவை பத்து வருடம் ஒன்றும் செய்ய முடியவில்லை.

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழியில் 2011 முதல் தற்போது வரை நாங்களும் திமுகவை கோட்டை பக்கம் வரவிடப் போவதில்லை என்றும் ஜெயக்குமார் உறுதியளித்தார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: