அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து, முடிவுக்கு வராமல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. கட்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வரும் அதே வேளை, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு குறைந்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கோரி, எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். ஒற்றைத் தலைமை விவகாரத்தால், பொதுக்குழு கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், ஒத்திவைக்க வேண்டும் என அதில் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, வரும் 23ம் தேதி (நாளை) திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்றும், அதை ஒத்திவைக்கும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையான நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தாங்களும் கட்டாயம் அதில் பங்கேற்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவருக்கு பல்வேறு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார்.
அதன்படி, இன்று அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் அதிமுகவின் 75 மாவட்ட செயலாளர்கள், அண்ணா தெழிற் சங்க நிர்வாகிகள், 25 மண்டல செயலாளர்கள் (போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்), அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்றும் அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்க வேண்டும் என்றும் தீர்மானத்தை இயற்றி, அந்த தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்போது, அதிமுகவில் அராஜகப் போக்கு நிலவி வருவதாக ஓபிஎஸ் கூறியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய ஜெயக்குமார், அதிமுகவில் அராஜகப் போக்கு எதுவும் இல்லை என்றும், ஜனநாயகத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். அப்போது “பாதைத் தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை” என்ற எம்.ஜி.ஆர். பாடலை பாடி ஓபிஎஸ்சை ஜெயக்குமார் விமர்சித்தார்.
Must Read : ஜெயலலிதா நினைவிடத்துக்கு தொண்டர்களுடன் செல்லத் தயாராகும் ஓ.பன்னீர் செல்வம்- உச்சகட்ட பரபரப்பில் அ.தி.மு.க
மேலும், ஓபிஎஸ் தப்புமேல் தப்பு செய்கிறார் என்றும் தவறான பாதையில் போகிறார் என்றும் கூறினார். அத்துடன், ஓபிஎஸ் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்டு, பொதுக்குழுவின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.