HOME»NEWS»TAMIL-NADU»jayakumar criticized kamal for focusing only on bigg boss without knowing the current situation vin tami

பிக் பாஸில் மட்டுமே கமல் கவனம் செலுத்துகிறார்- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

திமுகவில் குடும்ப அரசியல் நடைப்பெற்று வருவதாக குற்றம்சாட்டிய அவர், பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்றும், திமுகவில் யாரும் முதல்வராக முடியாது போஸ்டர் மட்டுமே அடிக்க முடியும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

பிக் பாஸில் மட்டுமே கமல் கவனம் செலுத்துகிறார்- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
அமைச்சர் ஜெயக்குமார்
  • News18
  • Last Updated :
  • Share this:

தமிழகம் வெற்றி நடை போடுவது தொடர்பாக பேச கமல்ஹாசனுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும், நாட்டு நடப்பு தெரியாமல் பிக் பாஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள செயிண்ட் ஆன்னீஸ் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய பின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேளாண் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விமர்சனம்  செய்யக்கூடாது. தீர்ப்பு குறித்து முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசு தான். மேல் நடவடிக்கை குறித்து மத்திய அரசு தான் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

முதல்வர் வேளாண் சட்டம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளதாக கூறிய அவர், விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதையும் முதல்வர் தெளிவுபடுத்தியிருப்பதகவும் தெரிவித்தார்.



மேலும், சீமான் கருத்திற்கு மனித குலமே ஆவலுடன் எதிர்நோக்கும் ஒன்று கொரோனா தடுப்பூசி என்றும், அம்மை மற்றும் போலியோ ஒழிக்க முடியாததாக இருந்ததாகவும், தடுப்பூசி கண்டுபிடித்து அதற்கு தீர்வு கண்டதாகவும் கூறிய அவர், வேண்டுமென்றே திசைத்திருப்பும் சிறுப்பிள்ளைத்தனமான செயலில் சீமான் ஈடுபட்டு வருவதாகவும், இதுப்போன்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

சி.டி.ரவி கருத்திற்கு பதலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் அதிமுக தான் பெரும்பான்மையான கட்சி என்றும், ஏற்றுக்கொள்ளும் நிலை வந்திருப்பதாகவும், அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் திட்டவட்டமாக கூறினார்.

Also read... ஜனவரி 14-ம் தேதி ஜல்லிக்கட்டை பார்க்க ராகுல் காந்தி தமிழகம் வருகை!

பா.ம.க அதிமுக கூட்டணியில் உள்ளதாகவும், கூட்டணி வேறு கொள்கை வேறு என்றும், வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு தொடர்பான மனு அளித்ததாகவும், ஜாதி வாரி கணக்கெடுப்பு முடித்து அரசிற்கு அறிக்கை அளித்த பின் தான் அதுத்தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கமல்ஹாசன் கருத்திற்கு பதிலளித்த அமைச்சர் தமிழ்நாடு அடிப்படை கட்டமைப்பு வசதி மற்றும் சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும், நாட்டு நடப்பு தெரியாமல் கமல்ஹாசன் பேசி வருவதாகவும், கமல்ஹாசன் பேப்பர் படிக்காமல், செய்திகள் பார்க்காமல் பிக்பாஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், தமிழகம் வெற்றி நடை போடுவது தொடர்பாக பேச எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

திமுகவில் குடும்ப அரசியல் நடைப்பெற்று வருவதாக குற்றம்சாட்டிய அவர், பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்றும், திமுகவில் யாரும் முதல்வராக முடியாது போஸ்டர் மட்டுமே அடிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
பள்ளிகள் திறப்பு தீர யோசித்து தான் முடிவு செய்யப்பட்டதாக கூறிய அவர், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களை கலந்தாலோசித்தே முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: