• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சார்பட்டா குறித்து ஜெயக்குமார் விமர்சனம்: கலையையும், கலைஞர்களையும் அவமதிக்கும் செயல்: கனிமொழி

சார்பட்டா குறித்து ஜெயக்குமார் விமர்சனம்: கலையையும், கலைஞர்களையும் அவமதிக்கும் செயல்: கனிமொழி

கனிமொழி

கனிமொழி

சார்பட்டா திரைப்படம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருப்பது, கலையையும், கலைஞர்களையும் அவமதிக்கும் செயல் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி சார்பில் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி பயிலக்கூடிய 20 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை திமுக மகளிரணி செயலாளர் எம்.பி கனிமொழி கலந்துகொண்டு வழங்கினார்.

    தொடர்ந்து, விழாவில் பேசிய கனிமொழி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெண்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திருமண உதவித்தொகை என்கின்ற திட்டத்தை கொண்டு வந்தார். குறிப்பாக அந்த திட்டத்தின் மூலம் பத்தாவது படித்து முடித்தால் மட்டுமே பெண்களுக்கு திருமண உதவி என்று கொண்டு வந்து பல பெண்களை படிக்கச் செய்தார்.

    Also read: சார்பட்டா பரம்பரை ஸ்டாலினை முன்னிறுத்த முயற்சிக்கும் படம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

    அந்த வரிசையில் தான் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் பெண்களுக்கு பேருந்துகளில் பயணம் இலவசம் என அறிவித்தவர் தான் நம் தளபதி. முன்பு பெண்களை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு ஆண்கள் வேலைக்கு செல்வது வழக்கமாக இருந்தது ஆனால் தற்பொழுது ஆண்களை வீட்டில் இருக்கச் சொல்லி பெண்கள் வேலைக்கு செல்லும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது தான் நமது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்றார்.

    நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக மகளிரணி செயலாளர் எம்பி கனிமொழி கூறுகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் என்பது யாருடைய பணிகளை பறித்துக் கொண்டு வழங்கக்கூடிய திட்டமல்ல. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவே வழங்கப்பட்டது.

    குறிப்பாக அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் சென்று வர வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே இந்த திட்டமானது தமிழக முதல்வரால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சார்பட்டா படம் குறித்து அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது இயக்குனர்கள் திமுகவிடம் இருந்து பணம் பெற்று படம் எடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருப்பது கலையையும், கலைஞர்களையும் மிகவும் அவமதிக்க கூடிய ஒரு செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: