Home /News /tamil-nadu /

தூத்துக்குடி விசாரணை ஆணைய அறிக்கையை அரசே கசியவிட்டதா? - முதல்வர் ராஜினாமா செய்ய ஜெயக்குமார் வலியுறுத்தல்

தூத்துக்குடி விசாரணை ஆணைய அறிக்கையை அரசே கசியவிட்டதா? - முதல்வர் ராஜினாமா செய்ய ஜெயக்குமார் வலியுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..

முதல்வர் ஸ்டாலின் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..

Thoothukudi firing: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் ரகசியங்கள் கசிந்த நிலையில் அதனைக் கண்டித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் ரகசியங்களைக் காக்கத் தவறியவர்களை  கைது செய்யுமாறு தமிழக அரசை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் ரகசியங்கள் கசிந்த நிலையில் அதனைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களை திசை திருப்ப அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை வெளியீடு என்ற நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அரங்கேற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதமே சீலிடப்பட்ட உறையில் வைத்து ரகசிய அறிக்கையாக வழங்கப்பட்ட நிலையில், அதில் உள்ள தகவல்கள் குறித்து ஒரு ஆங்கில மாத இதழ் செய்தி வெளியிட்டது தேவையற்ற விவாதங்களைக் கட்டமைத்து வருவதாகக் கூறியுள்ளார்.

    Also Read : ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

    ரகசிய ஆவணம் குறித்து ஆங்கில மாத இதழுக்கு ஆட்சியாளர்களே தகவலை  கசியவிட்டார்களா? அல்லது ரகசியத்தைக் காக்க முடியாத அரசின் கையாலாகத்தனமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.



    ஆங்கில இதழைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சரின் குடும்ப உறவினர்கள் என்று கூறிய அவர் அரசின் ரகசிய ஆவணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தைக் காக்கத் தவறிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  கூறியுள்ளார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Minister Jayakumar, Thoothukudi firing, Thoothukudi gun shoot

    அடுத்த செய்தி