அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா செல்வதை ஏற்க முடியாது: ஜெயக்குமார் காட்டம்!

கண்டனம்

முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் மனைவி வி.என் ஜானகி பெருந்தன்மையோடு அதிமுக இணைப்பிற்காக எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமையேற்க விட்டுக்கொடுத்தாரோ அதே போன்று சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டும் மாறாக தடையாக இருக்க கூடாது என்றும் ஜெயகுமார் கூறினார்

  • Share this:
    சசிகலா அதிமுக கொடி கட்டி காரில் செல்வதை ஏற்க முடியாது  என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

    அதிமுக மூத்த தலைவரும்  அக்கட்சியின் அவைத்தலைவருமான மதுசூதனன் மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் அவர் மருத்துவமனைக்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்  கூறுகையில், ‘சசிகலா அதிமுக கொடி கட்டி காரில் செல்வதை ஏற்க முடியாது. அதிமுகவோடு
    எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை. சசிகலா அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அதிமுக அவைத்தலைவர் மதூசூதனனை சந்திக்க சென்றதை விமர்சிக்க விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா- உடனடியாக வெளியேறிய எடப்பாடி பழனிசாமி: மருத்துவமனையில் பரபரப்பு!


    முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் மனைவி வி.என் ஜானகி பெருந்தன்மையோடு அதிமுக இணைப்பிற்காக எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமையேற்க விட்டுக்கொடுத்தாரோ அதே போன்று சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டும் மாறாக தடையாக இருக்க கூடாது என்றும் ஜெயகுமார் கூறினார்.

    இதையும் படிங்க: மாதமொரு முறை மின் அளவீடு செய்க: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி வலியுறுத்தல்!

    தொடர்ந்து பேசிய அவர்,  உதயநிதி ஸ்டாலின் படத்தை சட்டமன்றத்தில் சட்ட அமைச்சர் தனது அறையில் மாட்டியது விதிமீறலாகும். சட்ட அமைச்சர் தன் பூஜை அறையில் வேண்டுமானால் உதயநிதி படத்தை வைத்து பூஜை செய்யட்டும் அதை நாங்கள் எதிர்க்கவில்லை’ என்று விமர்சித்தார்.
    Published by:Murugesh M
    First published: