சார்பட்டா திமுகவின் பிரச்சாரப் படம்; எம்.ஜி.ஆர் குறித்து தவறாக சித்தரிப்பு - பா. ரஞ்சித்துக்கு ஜெயக்குமார் கண்டனம்

ஜெயக்குமார்

ஆட்சியில் இல்லாத வரை திமுகவை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கி போனதன் காரணம் என்னவோ? அதிகாரம் மையம் இடத்தில் அடைக்கலமாக எதிர் கட்சியின் மீது புழுதி வாரி தூற்ற வேண்டுமா ரஞ்சித் என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Share this:
  சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் எம்ஜிஆர் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் திமுகவின் பிரச்சார படமாக அத் உள்ளதாகவும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  பா.ரஞ்சித் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள சார்பட்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேவேளையில் அரசியலில் சில சலசலப்பையும் இப்படம் ஏற்படுத்தியுள்ளது. படத்தில் திமுகவுக்கு ஆதரவாக கருத்துகள் உள்ளதாகவும் மறைமுகமாக அதிமுகவையும் எம்ஜிஆரையும் தாக்கியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய சர்பேட்டா படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  திரைப்பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாபிடியாய் கைக்கொண்டவர்  எம்ஜிஆர் என்றும் , ‘ அவர் படங்களை முன்மாதிரியாக கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்து வீரர்கள் ஆகியுள்ளனர். மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை, குதிரையேற்றம் ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராகவே வெளிப் படுத்தி கொண்டவர் எம்ஜிஆர். முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் எம்ஜிஆர் தான்’ என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

  முகமது அலியை சென்னை அலைத்து வந்தவர்

  மேலும், ‘1980 ம் ஆண்டு தமிழ் நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்து சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர்  எம்ஜிஆர். போட்டி முடிந்து தன் ராமாவாரம் தோட்டத்திற்கு அழைத்து மீன் குழம்பு பரிமாறினார்; என்று குறிப்பிட்டுள்ள ஜெயக்குமார் அந்த அளவிற்கு குத்து சண்டை மீது எம்ஜிஆர் காதல் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க: சார்பட்டா பரம்பரை படத்துக்கு திரௌபதி இயக்குநர் மோகனின் கமெண்ட்ஸ்


  திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த  எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கியதாக கூறியுள்ள அவர், ’ நலிவடைந்த வீரர்களுக்கு அரசின் நிதி அளித்து சர்வதேச போட்டிகளில் அவர்களை பங்கேற்க செய்து அழகு பார்த்தார். ஆனால் சர்பேட்டா திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம் ஜி ஆர் அவர்களை கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: நெருக்கடி நிலை, கழகம், கலைஞர்: சார்பட்டா பரம்பரைக்கு உதயநிதி பாராட்டு!


  ரஞ்சித் எனும் ஈட்டி மழுங்கி போனதன் காரணம் என்ன

  கலை என்பது வரலாற்றை விட கூர்மையானது. எனவே அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்த பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல. வருங்கால தலைமுறைக்கே செய்யும் துரோகம் என்று கூறியுள்ள ஜெயக்குமார், “ஆட்சியில் இல்லாத வரை திமுகவை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கி போனதன் காரணம் என்னவோ? அதிகாரம் மையம் இடத்தில் அடைக்கலமாக எதிர் கட்சியின் மீது புழுதி வாரி தூற்ற வேண்டுமா ரஞ்சித்? சமரசம் செய்து கொள்வது கலைக்கு மட்டும் அல்ல கலைஞனுக்கும் அது அழகல்ல’ என்று தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: ராமனாக நடிக்க மறுத்த இளம் சூப்பர் ஸ்டார்...!


  எம்ஜிஆர் படங்களில் விளையாட்டு வீரராக ஏற்றுவரும் கதாபாத்திரங்கள் தன்னை போன்ற என்னற்றோருக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது என்றும் எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை சர்பேட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் ஜெயக்குமார் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

   
  Published by:Murugesh M
  First published: