• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொதுச்செயலாளர் பெயரைப் பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார் - சசிகலா மீது காவல்துறையில் ஜெயக்குமார் புகார்

பொதுச்செயலாளர் பெயரைப் பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார் - சசிகலா மீது காவல்துறையில் ஜெயக்குமார் புகார்

சசிகலா, ஜெயக்குமார்

சசிகலா, ஜெயக்குமார்

அதிமுக கொடியையும், பொதுச்செயலாளர் பெயரையும் பயன்படுத்தி அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

  • Share this:
    அதிமுகவின் பொன்விழா ஆண்டு தினத்தன்று சசிகலாதிமுகவின் கொடியை ஏற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை பயன்படுத்தி கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்துள்ளது குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல், விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் புகார் மனுவை அளித்தனர். அதில் சசிகலா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவின் கொடியையும், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரையும் தவறான எண்ணத்தோடு பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘அதிமுக என்ற கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்று வருவதாகவும், தொண்டர்களிடையே ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சசிகலா தவறான எண்ணத்தில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கக்கூடிய ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, அவைத்தலைவர் ஆகியோரிடம்தான் கட்சிக்கு உரிமை உள்ளது என்று டெல்லி உயர் நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ள நிலையில், கட்சியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தவே சசிகலா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

    தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும்பொழுது மாம்பலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் இல்லாத நிலை இருப்பதாகவும், புகார் அளித்த பிறகு புகாரைப் பெற்றதற்கான சிஎஸ்ஆர் எனப்படும் ஒப்புகை சீட்டை கூட தராமல் இருட்டடிப்பு செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் முன்னாள் அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன நிலை என்றும் கேள்வி எழுப்பினார். திமுகவும், சசிகலாவும் கைகோர்த்து அதிமுகவில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

    தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சாமானிய மக்களுக்கும் காவல்துறைக்கும் உரிய மரியாதையும் பாதுகாப்பும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, திமுகவினரை பணியில் அமர்த்த திமுக அரசு ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். அம்மா உணவகத்தை மூடலாம் என்று திமுக அரசு நினைத்தால் அதற்கான தகுந்த நடவடிக்கையை அதிமுக எடுக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: