• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • கிராபிக்ஸ் அதிகமாக செய்யலாம்...! ஸ்டாலின் வயலில் நடந்து செல்லும் புகைப்படம் குறித்து ஜெயக்குமார் கருத்து

கிராபிக்ஸ் அதிகமாக செய்யலாம்...! ஸ்டாலின் வயலில் நடந்து செல்லும் புகைப்படம் குறித்து ஜெயக்குமார் கருத்து

ஸ்டாலின், ஜெயக்குமார்

ஸ்டாலின், ஜெயக்குமார்

ஸ்டாலின் வயலில் நடந்து செல்வது போல் சமூக வலைதளங்களில் வரும் புகைப்படம் பற்றிய கேள்விக்கு கிராபிக்ஸ் அதிகமாக செய்யலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஸ்டாலின் வயலில் நடந்து செல்வது போல் சமூக வலைதளங்களில் வரும் புகைப்படம் பற்றிய கேள்விக்கு கிராபிக்ஸ் அதிகமாக செய்யலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், ஜிஎஸ்டி 39-வது கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது மாநில அரசின் சார்பில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்க செல்கிறோம்.

  போலியான ரசீது கொடுத்து ஏமாற்றுகின்ற செயலில் வணிக வளாகங்கள் ஈடுபட்டால் அது சட்டப்படி குற்றம். அதற்கான தண்டனை சட்டத்தில் இருக்கிறது. 292 சரக்கு மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளது, 24 சரக்கு மீதான வரிகள் முற்றிலும் விளக்கப்பட்டுள்ளது, 42 சேவை முழுமையான வரி விலக்கு செய்யப்பட்டுள்ளது.

  Aslo read : ‘மணி கண்ட்ரோல்’ தளம் நடத்தும் புதிர்ப்போட்டி - ₹ 1 லட்சம் பரிசாக வெல்ல வாய்ப்பு

  ஜிஎஸ்டி கவுன்சிலில் அழுத்தம் கொடுத்து வரி குறைப்பு வரிவிலக்கு அது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து மக்களுடைய நலன் முழுமையாக காப்பாற்றப்பட்டுள்ளது.

  இன்னும் நம் மாநிலத்தின் சார்பாக 62 சேவை வரி குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்த வரையில் பேரறிஞர் அண்ணா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஜெயலலிதா இவர்கள் அனைவரும் மிகப் பெரிய சக்திகள் அந்த சக்திகளை வைத்துதான் நாளையும் மக்களை சந்திப்போம்.

  Also read : LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு விடுமுறை இல்லை - நேற்றைய உத்தரவை நிறுத்திவைத்தது அரசு

  மக்கள், வணிகர்கள் பாதிக்கின்ற எந்த ஒரு செயலாக இருந்தாலும் நிச்சயமாக ஜிஎஸ்டி கவுன்சிலில் அதற்கான எதிர்ப்பை நாங்கள் தெரிவிப்போம். நடிகர் ரஜினிகாந்த் அவருடைய கொள்கை இலட்சியத்தை கூறியிருக்கிறார் முதலில் அரசியல் சமுத்திரத்தில் குதிக்கட்டும் குதித்த பிறகு எங்களுடைய கருத்துக்களை தெரிவிப்போம்.

  2011, 2016 அடுத்து 2021 என தொடர்ந்து அதிமுக தான் மக்களுக்கான ஆட்சியை நிலைநிறுத்தும். ரஜினியை பொறுத்தவரையில் அதிமுகவை குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை அதனால் எதுவும் கூறமுடியாது.

  Also read: அந்தக் கருத்தை கொண்டுபோய் சேர்த்த அனைவருக்கும் நன்றி - நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்

  அரசியல் இல்லாத நிலையில் எப்படி ரஜினி கமல் இணைவார்கள் அது ஒரு அனுமானம். எங்களைப் பொறுத்தவரையில் மக்கள் செல்வாக்கு பெற்ற, மக்கள் எதிர்பார்க்கின்ற,அனைத்தையும் நிறைவேற்றுகின்ற அரசு என்றால் எங்களுடைய அரசு.

  இது மக்களுக்கான அரசு எனவேதான் பல்வேறு திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அமல்படுத்தாத திட்டங்கள் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுகிறது.ஒரு சமூக நீதிக்கான அரசு என்பதன் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கான அரசாக இருக்கிறது.இதனை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

  Also read : சுயமரியாதைத் திருமணம் செய்த ஜோடி கடத்தல்... ட்விட்டரில் ட்ரெண்டாகும் #இளமதி_எங்கே ஹேஷ்டேக்...!

  ஸ்டாலின் வயலில் நடந்து செல்வது போல் சமூக வலைதளங்களில் வரும் புகைப்படம் பற்றிய கேள்விக்கு கிராபிக்ஸ் அதிகமாக செய்யலாம் இந்த காலத்தில் சர்வ சாதரனம் ஸ்டாலின் வயலில் எப்படி நடந்து போனார் என்று தெரியும் ரெட் கார்பெட்டில் ஷூ போட்டு நடந்து போன மனிதன், வெறும் காலால் நடந்து போனவர் முதல்வர் பழனிசாமி என கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: