மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் கொண்டுவருவதில் தவறில்லை! அமைச்சர் ஜெயக்குமார்

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் கொண்டுவருவதில் தவறில்லை! அமைச்சர் ஜெயக்குமார்
  • News18
  • Last Updated: November 20, 2019, 7:45 PM IST
  • Share this:
மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைமுறையானது ஏற்கனவே இருந்த ஒன்று தான். அதைக் கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டம் சார்பில் 66-வது கூட்டுறவு வாரவிழா அண்ணாமலை மன்றத்தில் கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டு சுய
உதவிக் குழுக்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு 59.72 லட்சம் கடன் உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி ஜெயவர்தன், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயகுமார், ‘உள்ளாட்சித் தேர்தலில் மேயர், சேர்மன் உள்ளிட்ட பதவிகளுக்கு கவுன்சிலர் மூலம் தேர்வு செய்யப்படும் என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறதா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். எந்த முறையில் நடத்துகிறார்கள் என்று பார்க்கக் கூடாது. குறிப்பாக இந்த மறைமுகத் தேர்தல் ஏற்கனவே இருந்த ஒன்றுதான். தி.மு.க ஆட்சியிலும் மறைமுகத் தேர்தல் நடைபெற்றுள்ளது. என குறிப்பிட்டார்.
முதல்வர்களை எம்.எல்.ஏக்கள் இணைந்துதான் தேர்ந்தெடுக்கின்றனர்.அதேபோல, பிரதமரையும் எம்.பிகள்தான் தேர்ந்தெடுக்கின்றனர். அதுபோல தற்போது மேயர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் இணைந்துதான் சந்திக்கும் என முதல்வரே அறிவித்துவிட்டார். இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: November 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading