தமிழ் முறைப்படி திருமணம் செய்த ஜப்பான் பெண்! கும்பகோணத்தைக் கலக்கிய காதல் தம்பதி

மேகுமி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து காலில் மெட்டி அணிந்து, பெற்றோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு வசந்தனின் கரம்பிடித்தார்.

தமிழ் முறைப்படி திருமணம் செய்த ஜப்பான் பெண்! கும்பகோணத்தைக் கலக்கிய காதல் தம்பதி
கணவருடன் ஜப்பானிய பெண்
  • News18
  • Last Updated: August 25, 2019, 10:06 PM IST
  • Share this:
கும்பகோணத்தில் தமிழ் இளைஞருக்கும் ஜப்பானிய இளம்பெண்ணுக்கு தமிழ் முறைப்படி இன்று திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகளின் உறவினர்கள் தமிழ் கலாச்சாரப்படி வேஷ்டி, புடவை அணிந்து மணமக்களை வாழ்த்தினர்.

கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் கிருஷ்ணவேணி தம்பதி. இவர்களது மகன் வசந்தன் கடந்த 7 ஆண்டுகளாக ஜப்பானில் ஆராய்ச்சி கல்வியை முடித்து அங்கேயே பணி புரிகிறார்.

இந்நிலையில் வசந்தனுக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார் மேகுமி. இவர் அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அறிமுகம் நாளடைவில் காதலாக மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்வதாய் முடிவெடுத்தனர்.


இருவரது பெற்றோருடைய சம்மதத்தையும் பெற்ற வசந்தனுக்கும், மேகுமிக்கும் கும்பகோணத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.

மணப்பெண்ணின் பெற்றோர் வர இயலாததால் மணமகனின் தாய் மாமன் பெண்ணின் பெற்றோராய் இருந்து சம்பரதாயங்கள் செய்தார். மேகுமி,
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து காலில் மெட்டி அணிந்து, பெற்றோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு வசந்தனின் கரம்பிடித்தார்.இத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகளின் தங்கை, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ்க் கலாச்சாரப்படி வேட்டி, புடவை அணிந்து மணமகனின் உறவினர்களைக் கை கூப்பி வணக்கம் தெரிவித்தது திருமணத்துக்கு வந்திருவர்களை நெகிழ வைத்தது. இந்த திருமண வைபவ காட்சிகள் அனைத்தையும் இணையம் மூலமாக ஜப்பானில் இருந்தபடியே மணப்பெண்ணின் பெற்றோர் கண்டு ஆசீர்வதித்தனர்.

ஜப்பானைச் சேர்ந்த பெண், தமிழ் முறைப்படி திருமணம் செய்தது அந்தப் பகுதியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

Also see:

First published: August 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading