நாட்டின் அனைத்து கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கிறது - மு.க.ஸ்டாலினுக்கு பவன் கல்யாண் பாராட்டு!

pawan kalyan

எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது.

 • Share this:
  தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பணிக்காக அவரை வாழ்த்தியுள்ளார்.

  தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது என தனது வாழ்த்து செய்தியில் பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.

  தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் பவன் கல்யாண், பிரபல நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரான பவன் கல்யாண், ஜன சேனா என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். 2014ம் ஆண்டு தொடங்கிய இவரின் கட்சிக்கு தற்போது ஒரு எம்.எல்.ஏவும் உள்ளார்.

  இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அரசியல் பணிக்காக பவன் கல்யாண் பாராட்டியுள்ளார்.

  அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  “அன்புக்குரிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது.

  உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  பவன் கல்யாண்
  தலைவர், ஜனசேனா

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Arun
  First published: